பாதுகாப்பான நகரத் திட்டம்: கிள்ளான் அரச மாநகராட்சி மன்றத்திற்கு 1.15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

27 மே 2026, 5:51 AM
பாதுகாப்பான நகரத் திட்டம்: கிள்ளான் அரச மாநகராட்சி மன்றத்திற்கு 1.15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 27: கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் (MBDK), தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட சில அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பொதுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், '2026-ஆம் ஆண்டு பாதுகாப்பான நகரத் திட்டம் 2.0' (Program Bandar Selamat 2.0)-இன் கீழ் மொத்தம் 1.15 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.

கிள்ளான் அரச மாநகராட்சி மன்றத்தின் மேயர் டத்தோ ஹாஜி அப்துல் ஹாமித் ஹுசைன் இது குறித்துக் கூறுகையில், குற்றச் செயல்களின் குறியீடு (Indeks Jenayah) அதிகமாக இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ள பண்டார் செந்தோசா (Bandar Sentosa) மற்றும் பெக்கான் காப்பார் (Pekan Kapar) ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"இந்த முன்முயற்சியானது, சமூகத்தின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பிரகாசமான விளக்குகள் பொருத்துதல் மற்றும் சிசிடிவி கேமராக்கள் (CCTV) போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகிறது," என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தின் அமலாக்கமானது 'பண்டார் பிந்தார் கிள்ளான்' (Bandar Pintar Klang) எனும் இலக்கை வலுப்படுத்த உதவுவதோடு, வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) ஏற்ப நிலையான, உள்ளடக்கிய மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட நகர மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் விவரித்தார்.

இதற்கிடையில், கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் சர்வதேசத் தரத்திலான, 44 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்ட புத்தம் புதிய சொகுசுப் பேருந்து (Semi High Deck Bus) ஒன்றையும் பெற்றுள்ளது. ஸ்கானியா K360 (Scania K360) சேசிஸ் மற்றும் TQ Z12 ரகக் கட்டமைப்பைக் கொண்ட இந்தப் பேருந்தின் மதிப்பு 986,700 ரிங்கிட் ஆகும்.

இந்த புதிய பேருந்து, இந்த உள்ளாட்சி அமைப்பின் அதிகாரப்பூர்வ விவகாரங்கள் மற்றும் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், இது மாநகராட்சிப் பணியாளர்களின் பயணச் சௌகரியத்தையும் வசதியையும் கணிசமாக உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கிள்ளான் அரச மாநகராட்சி மன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான 5-ஆவது மாதாந்திர முழு வாரியக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த புதிய பேருந்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.