ஷா ஆலாம், மே 25: நேற்று நடைபெற்ற சுகாதார அமலாக்க நடவடிக்கையின் போது, போதுமான குப்பைத் தொட்டிகளை வழங்கத் தவறிய பாண்டான் ஜெயா இரவுச் சந்தையைச் சேர்ந்த இரண்டு வியாபாரிகளுக்கு அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) அபராதம் விதித்துள்ளது.
MPAJ-இன் முகநூல் பதிவின்படி, நகரச் சேவைகள் மற்றும் சுகாதாரத் துறை (PBK) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 230 கடைகள் சோதனையிடப்பட்டன.
இரவுச் சந்தை வியாபாரிகள் மத்தியில், குறிப்பாக சுகாதாரம் தொடர்பான உரிம நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
"விசாரணையில், இரண்டு வியாபாரிகள் நிர்ணயிக்கப் பட்டபடி குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே, அவர்களுக்கு MPAJ-இன் 2007 உணவு நிறுவன துணைச் சட்டத்தின் (UUK 16) கீழ் அபராதம் விதிக்கப்பட்டது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
MPAJ-இன் தகவல்படி, பாண்டான் ஜெயா இரவுச் சந்தையில் மொத்தம் 330 வியாபாரக் கடைகள் உள்ளன.
இருப்பினும், மழை காரணமாக சோதனை நடவடிக்கையின் போது சில வியாபாரிகள் முழுமையாக தங்கள் கடைகளைத் திறக்கவில்லை.
பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளில் குப்பைத் தொட்டிகளை வைத்து உரிம நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றுவதாக MPAJ தெரிவித்தது.
இந்த நடைமுறை இரவுச் சந்தைப் பகுதியை வருகையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
அதே வேளையில், வியாபார நடவடிக்கைகள் நடைபெறும் நேரம் முழுவதும் போதுமான குப்பைத் தொட்டிகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என வியாபாரிகளுக்கும் இரவுச் சந்தை நிர்வாகத்திற்கும் இந்த உள்ளூராட்சி மன்றம் நினைவூட்டியது.
இரவுச் சந்தைச் சூழல் முறையாகவும் இணக்கமான முறையிலும் இருப்பதை உறுதி செய்ய, சுகாதார அம்சங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் MPAJ வலியுறுத்தியது.
குப்பைத் தொட்டிகளை வழங்கத் தவறிய இரண்டு இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு அபராதம்
25 மே 2026, 3:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
நான்கு மாதங்களில் 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டு வரி வசூல் - எம்பிஏஜே தகவல்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
26 மே 2026

selangor
வரி பாக்கி வைத்திருப்போரின் வீடுகளுக்கே சென்று வசூல் நடவடிக்கை: எம்பிஏஜே
Shalini Rajamogun
18 மே 2026

selangor
உணவுக் கூடங்களை மேம்படுத்த அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் RM4.7 மில்லியன் ஒதுக்கீடு
Shalini Rajamogun
18 மே 2026

national
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கனரக வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




