பந்திங், மே 2: பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற, சிலாங்கூர் மாநில அளவிலான சித்திரை கலை விழா 2026-இன் ஒரு அங்கமாக, மாநிலத்தின் ஐந்து சமயங்களுக்கான நிதி உதவித் திட்டத்தின் (LIMAS) கீழ், தகுதி பெற்ற 23 இந்து ஆலயங்களுக்கு இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கப் பட்டது.
சிறப்புரைக்குப் பின், சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் அவர்கள் இந்த ஆலயங்களுக்கு மானியத் தொகையை வழங்கினார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஆலயங்களுக்கான வருடாந்திர நிதி உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மொத்தம் RM 248,000 தொகையை இரண்டாம் கட்ட மானியமாக ஒதுக்கியுள்ளது.
நிதி உதவி பெற்ற ஆலயங்களின் விவரம்:
சிலாங்கூர் மாநில அளவில் இரண்டாம் கட்ட (Fasa 2/2026) நிதி உதவியைப் பெற்ற 23 ஆலயங்கள் பின்வருமாறு:
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கிள்ளான்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கம்போங் புக்கிட் கெமுனிங், கிள்ளான்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தென்னமரம், பத்தாங் பெர்ஜூந்தை
ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம், காஜாங்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பெர்ஜூந்தை டின், பத்தாங் பெர்ஜூந்தை
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், அம்பாங்
தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தேசா அமான், சுங்கை பூலோ
அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ராசா, உலு சிலாங்கூர்
ஸ்ரீ மகா மகேஸ்வரி காளியம்மன் ஆலயம், கம்போங் பூங்கா மெலோர், பத்து 14 பூச்சோங்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பண்டார் பாரு புருக்லெண்ட்ஸ், பந்திங்
மகா சித்தி விநாயகர் ஆலயம், பாங்கி
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், கம்போங் ஜென்ஜாரோம், கோலா லங்காட்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கம்போங் தாசேக் பெர்மாய், அம்பாங்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பூன் ஹியன் தோட்டம், கிள்ளான்
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், கெர்லிங்
ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம், ஜுக்ரா, பந்திங்
ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயம், சுங்கை பெர்ணம் தோட்டம்
ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஷேத்திரம், பத்து 6, கோலா சிலாங்கூர்
ஸ்ரீ மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், மெர்பாவ் தோட்டம், ஜெராம்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், கிள்ளான்
ஸ்ரீ மகா மதுரைவீரன் ஆலயம், புக்கிட் ரோத்தான்
ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோலா அம்பாங்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், டேசா பெரங்சாங்
இந்த மானியத் தொகையைப் பெற்றுக் கொண்ட ஆலயப் பிரதிநிதிகள், மாநில அரசுக்கும் மாண்புமிகு பாப்பா ராய்டு அவர்களுக்கும் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.








