கிள்ளான், ஏப்ரல் 14- நோன்புப் பெருநாளை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர்களுக்கு 200 வெள்ளி மதிப்புள்ள மொத்தம் 446 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு வழங்கும் நோக்கில் இந்தொகுதியில் 500 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 446 பேர் இந்த பற்றுச் சீட்டைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2023 பாடல் திறன் போட்டி தொடர்பாக நேற்றிரவு இங்கு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் பற்றுச்சீட்டை இன்னும் பெறாதவர்கள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் செந்தோசா தொகுதி சேவை மையத்தில் அதனைப் பெறலாம் என்று கூறினார்.
பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்த பற்றுச்சீட்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது
இந்த பற்றுச்சீட்டின் மதிப்பு 2023 வரவு செலவுத் திட்டத்தில் 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநில அரசு 1 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பும் மாதத்திற்கு 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக ஆக உயர்த்தப்பட்டது.
ECONOMY
செந்தோசா தொகுதியில் 446 பேருக்கு நோன்புப் பெருநாள் பற்றுச் சீட்டுகள் விநியோகம்
14 ஏப்ரல் 2023, 2:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
`PLATS Masuk Bazar` திட்டத்தின் கீழ் RM10 மில்லியன் அளவிலான விற்பனை பதிவு
Shalini Rajamogun
22 மே 2026

selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

உங்கள் கருத்து என்ன?




