ECONOMY

பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து

1 ஜனவரி 2023, 5:01 AM
பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 1- மாட்சிமை தஙகிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் 2023 புத்தாண்டு வாழ்த்துகளை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து கொண்டனர்.

மக்களின் ஒற்றுமைக்காகவும் நாட்டின் நலனுக்காகவும்  பிரார்த்தனை செய்வதாக இஸ்தானா நெகாராவின் முகநூல் வாயிலாக வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் அவர்கள் தெரிவித்தனர் .

அனைத்து மக்களும் நாடும் ஆசி, நல்வாழ்வு மற்றும் செழிப்பான வாழ்வைப் பெறுவதோடு எந்த வகையான பேரழிவு மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக மாமன்னர் தம்பதியர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாநிலங்களின் தற்போதைய  நிலைமை மற்றும் நடப்புச் சூழலில் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் காரணமாக இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நேற்றிரவு நடத்தப்பட வேண்டிய புத்தாண்டு கொண்டாட்டம்  செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.