ECONOMY

கோம்பாக் தொகுதி பங்சாபூரி லக்ஸ்மனா அடுக்குமாடி மக்களின் ஆதரவுக்கு நன்றி கூறினார் டத்தோ ஸ்ரீ அமிரிடின்

8 நவம்பர் 2022, 12:29 AM
கோம்பாக் தொகுதி  பங்சாபூரி லக்ஸ்மனா அடுக்குமாடி மக்களின் ஆதரவுக்கு   நன்றி கூறினார்  டத்தோ ஸ்ரீ அமிரிடின்

கோம்பாக், நவம்பர்.7- இம்முறையும் கோம்பாக் தொகுதியை கைபற்றும் வகையில் கோம்பாக் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி களம் இறங்கி உள்ளார்.

அந்த வகையில் கோம்பாக் தொகுதியில் அவருக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் பங்சாபூரி லக்ஸ்மனா அடுக்குமாடி அருகே டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தில் மக்கள் அவருக்கு பெரும் ஆதரவு தந்து பலத்த முழக்கத்துடன் அவரை வரவேற்றார்கள்..

அந்த வேளையில் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில் பக்காத்தான் ஹராப்பான் கோட்டையாக திகழும் நம் கோம்பாக் தொகுதியை மீண்டும் வெற்றி பெற இங்கு இருக்கும் மக்கள் அனைவரும் எனக்கு மிக பெரிய ஆதரவை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

செல்லும் இடமெல்லாம் எனக்கு மக்கள் மகத்தான ஆதரவு வழங்கி வருகிறார்கள். அதனால் இந்த கோம்பாக் தொகுதி மக்களுக்கு என்றும் நான் விசுவாசமாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி ; ஆர்.பார்த்திபன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.