ECONOMY

போக்குவரத்துக்கு இடையூறு- பூச்சோங் ஜெயாவில் 82 வாகனங்களுக்கு குற்றப்பதிவு

24 செப்டெம்பர் 2021, 5:24 AM
போக்குவரத்துக்கு இடையூறு- பூச்சோங் ஜெயாவில் 82 வாகனங்களுக்கு குற்றப்பதிவு

ஷா ஆலம், செப் 24- பூச்சோங் ஜெயா, ஜாலான் பிப்பிட் 4இல் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 82 வாகனங்களுக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் குற்றப்பதிவுகளை வெளியிட்டது.

கடந்த புதனன்று இப்பகுதியில் போலீஸ் துறையுடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் நிர்வாக துறையின் துணை இயக்குநர் அஸ்பரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக போலீசார் 30 குற்றப்பதிவுகளை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகனங்களை சாலையோரங்களிலும் வளைவுகளிலும் நிறுத்தியதன் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய குற்றத்திற்காக அதன் உரிமையாளர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் விதிமுறைகளை மதித்து நடப்பதை உறுதி செய்வதற்காக இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.