ECONOMY

இன்று நாட்டில் 17,577 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,646 நேர்வுகள்

17 செப்டெம்பர் 2021, 11:30 AM
இன்று நாட்டில் 17,577 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,646 நேர்வுகள்

ஷா ஆலம், செப் 17- நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்று சம்பவங்கள் 17,577 ஆக குறைந்தன. நேற்று இந்த எண்ணிக்கை 18,815 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 2,718 ஆக இருந்த கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 2,646 ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நோய்த் தொற்று எண்ணிக்கையில்  சரவா மாநிலம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இம்மாநிலத்தில் இன்று 3,480 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில்  ஜொகூரில் 2,334 பேருக்கு இந்நோய்த் தொற்று கண்டது உறுதி செய்யப்பட்டது.

ஆயிரத்திற்கும் அதிகமான சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களில்  பேராக் (1,596), சபா (1,533), பினாங்கு (1,462), கெடா (1,173) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- கிளந்தான் (869), பகாங் (832), திரங்கானு (719), கோலாலம்பூர் (366), மலாக்கா (287), நெகிரி செம்பிலான் (198), பெர்லிஸ் (41), புத்ரா ஜெயா (31), லவுவான் (10)

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.