ECONOMY

கோவிட்-19 சம்பவங்கள் மேலும்  அதிகரிப்பு- இன்று 8,290 நேர்வுகள் பதிவு

28 மே 2021, 2:29 PM
கோவிட்-19 சம்பவங்கள் மேலும்  அதிகரிப்பு- இன்று 8,290 நேர்வுகள் பதிவு

ஷா ஆலம், மே 28- கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் 8,290 சம்பவங்கள் பதிவாகின. நாட்டில் இதுவரை பதிவான கோவிட்-19 சம்பவங்களில் இதுவே மிக அதிகமானதாகும்.

இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிலாங்கூரில் இன்று 2,052 சம்பவங்கள் பதிவான வேளையில் கிளந்தானில் 851 சம்பவங்களும் கோலாலம்பூரில் 830 சம்பவங்களும் ஜொகூரில் 762 சம்பவங்களும் சரவாவில் 698 சம்பவங்களும் பதிவாகின.

கோவிட்-19 சம்பவங்கள் பதிவான இதர மாநிலங்கள் வருமாறு-

கெடா (544), நெகிரி செம்பிலான் 520), பினாங்கு (421), பேராக் (405), மலாக்கா( 380), சபா (308), பகாங் 254),  திரங்கானு (207), புத்ரா ஜெயா (44), பெர்லிஸ் (8), லவுபான் (6).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.