ECONOMY

எல்.ஆர்.டி. விபத்து-  65 பயணிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை

25 மே 2021, 1:20 PM
எல்.ஆர்.டி. விபத்து-  65 பயணிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை

கோலாலம்பூர், மே 25- இரு எல்.ஆர்.டி. இலகு ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் காயமடைந்த 65 பயணிகள் கோலாலம்பூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்மருத்துவமனையில் 29 ஆண்களுக்கும் 36 பெண்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைனால் அப்துல்லா கூறினார்.

கிசிச்சை பெறுவோரில் ஆறு வெளிநாட்டினர் தவிர்த்து மற்ற அனைவரும் உள்நாட்டினராவர் என்று அவர் குறிப்பிட்டார்.

கிளானா ஜெயா தடத்தின் கே.எல்.சி.சி. நிலையம் அருகே நேற்று இரவு 8.45 மணியளவில் இரு எல்.ஆர்.டி. இலகு ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 47 பயணிகள் கடுமையான காயங்களுக்கும் 166 பயணிகள் லேசான காயங்களுக்கும் உள்ளாகினர்.

பயணிகள் இரயிலுக்கும் பரீட்சார்த்த பயணத்தில் இருந்த பழுதடைந்த இரயிலுக்கும் இடையே  இந்த மோதல் ஏற்பட்டது. 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.