ECONOMY

சுங்கை ராமால் தொகுதியில் தடுப்பூசி பதிவு முகப்பிடம் திறக்கப்பட்டது.

18 ஏப்ரல் 2021, 7:24 AM
சுங்கை ராமால் தொகுதியில் தடுப்பூசி பதிவு முகப்பிடம் திறக்கப்பட்டது.

ஷா ஆலம், ஏப் 18- கோவிட்-19 தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் சுங்கை ராமால் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சந்தை மற்றும் பள்ளிவாசல்களை மையமாக கொண்டு இந்த முகப்பிடங்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் மஸ்வான் ஜொஹார் கூறினார்.

இந்த தடுப்பூசி பதிவு நடவடிக்கை குறித்து தொடக்கத்தில் பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியாமல் இருந்தது.  இதனைக் கருத்தில் கொண்டு நானும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங்கும்  நோய்த் தடுப்புத் திட்டத்திற்கான பதிவு மையங்களைத் திறக்க முடிவெடுத்தோம் என்றார் அவர்.

இணையம் வழி தடுப்பூச் திட்டத்திற்கு இணையம் வழி பதிவு செய்வதற்கு பலரிடம் கைபேசி இல்லை. அப்படியே கைப்பேசி இருந்தாலும் அது பழையதாக உள்ளது. ஆகவே, இத்தகைய தரப்பினரை வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் மேலும் சொன்னார்.

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தடுப்பூசித் திட்டத்தில் உடனடியாக பதிந்து கொள்ளும்படி தொகுதி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.