ECONOMY

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீனப்புத்தாண்டு வாழ்த்து

12 பிப்ரவரி 2021, 6:36 AM
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீனப்புத்தாண்டு வாழ்த்து

ஷா ஆலம், பிப் 12- நாளை சீனப்புத்தாண்டைக் கொண்டாடும் நாட்டிலுள்ள அனைத்து சீன சமூகத்தினருக்கும் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சீன சாஸ்திரப்படி  இந்த புத்தாண்டு மாடு ஆண்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புணர்வு, கட்டொழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியற்றின் அடையாளமாக இந்த ஆண்டு விளங்குவதாகச் சொன்னார்.

தற்போது நாம் எதிர்நோக்கியிருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்திலிருந்து மீள்வதற்கு இந்த மூன்று நற்பண்புகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் கடந்து வந்த எலி ஆண்டு நாம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. பிறக்கின்ற இந்த மாடு ஆண்டு நோய்த் தொற்றிலிருந்து நாம் விடுபடுதற்குரிய ஆற்றலை வழங்கும் என எதிர்பார்ப்போம் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதில் நாடும் மக்களும் வலுவான மனோதிடமும் சுயகௌரவமும் கொண்டவர்களாகவும் தீமையைக் வெல்லக் கூடியவர்களாகவும் விளங்குவதை உறுதி செய்வதில்  பொறுப்புணர்வு, கட்டொழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் முக்கிய பங்கினை ஆற்றும் என்று  அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.