ECONOMY

சிலாங்கூரில் இன்று 782 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி- 9 மரணங்கள் பதிவு

22 ஜனவரி 2021, 1:20 PM
சிலாங்கூரில் இன்று 782 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி- 9 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 22- சிலாங்கூரில் இன்று புதிதாக 782 பேருக்கு கோவிட்-19 நோய் கண்டது உறுதி செய்யப்பட்ட வேளையில் ஒன்பது பேர் அந்நோயினால் மரணமடைந்தனர்.

புதிய தொற்று மையங்கள் மற்றும் நடப்பிலுள்ள தொற்று மையங்கள் மூலம் 153 சம்பவங்களும் நோய் கண்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர்கள் வாயிலாக 421 சம்பவங்களும் இதர சோதனை நடவடிக்கைகளில் 208 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

வேலையிடத்தை மையப்படுத்திய மற்றும் நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட தொற்று மையங்களாக ஜாலான் சுங்கை சான்டோங் மற்றும் புத்ரா துஜோ ஆகிய இரு தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே,  மாநிலத்தில் 939 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை கூறியது. 

மாநிலத்தில் இதுவரை 118 பேர் இந்நோய்க்கு பலியான வேளையில் 43,755 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.