ECONOMY

நாளை முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட உணவகங்களுக்கு அனுமதி

21 ஜனவரி 2021, 12:10 PM
நாளை முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட உணவகங்களுக்கு அனுமதி

ஷா ஆலம், ஜன 21- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உணவகங்கள் நாளை முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.

உணவக நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார் மீது நடத்தப்பட்ட பரிசீலனையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார்.

வேலை முடிந்து தாமதமாக வரும் தங்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் பலர் புகார் செய்தனர். இரவு வேளையில்தான் வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதாக உணவக உரிமையாளர்கள் குறிப்பாக பெர்கர் விற்பனை செய்வோர் முறையிட்டனர்.

இதன் அடிப்படையில் வியாபார நேரத்தை அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 வரை  நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

உணவக விற்பனை நேரத்தை இரவு 8.00 மணி வரை அல்லாமல் லைசென்சில் குறிப்பிட்ட நேரம் வரை நீட்டிப்பதற்கு அனுமதிக்கும்படி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில்  அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

இதன் வழி நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவும் அதேவேளையில் உணவு பட்டுவாடா தொழிலாளர்களின் வருமானம் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று அக்குழு கூறியிருந்தது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.