கோம்பாக், மே 29: கோம்பாக் இந்தியன் (பத்துமலை)செட்டில்மெண்ட் கிராம மக்களின் மறுகுடியமர்வு செயல்முறையின் இறுதி கட்டத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம், அப்பகுதியை மிகவும் முறையான மற்றும் சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்ட இந்திய கிராமமாக மறுசீரமைப்பதற்கான வழிவகுக்கப் பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மறுகுடியமர்வு விவகாரம், இறுதிக்கட்டமாக பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களை இடமாற்றம் செய்ததன் மூலம் முழுமையாக தீர்க்கப் பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"2009-ஆம் ஆண்டு முதல் தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களில் குடியிருந்தவர்களுடன் தொடர்புடைய இந்த விவகாரத்திற்கு, முழுமையான தீர்வை உறுதி செய்வதற்காகப் பல கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இடமாற்றம் செய்யப் பட்ட இந்த இறுதி குழுவுடன் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
"ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர் சங்கம் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் மாநில அரசால் இந்த விவகாரத்தை வெற்றிகரமாக தீர்க்க முடிந்தது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று ஸ்ரீ கோம்பாக், டேவான் பிரிங்கினில் (Dewan Beringin) நடைபெற்ற கோம்பாக் குடியிருப்பாளர்களுக்கான 'புக்கு ஹிஜாவ்' (Buku Hijau) விவசாய நில விண்ணப்ப ஒப்புதல் மற்றும் இந்தியன் செட்டில்மென்ட் கிராமத்திற்கான 5A நோட்டீஸ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த மறுகுடியமர்வு செயல்முறை மாநில அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும் என விவரித்த அமிருடின், அதே வேளையில் அனைவரையும் உடனடியாக திருப்திபடுத்த முடியாது என்பதையும், இது நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
குடியிருப்பாளர்களுக்கு மிகவும் முறையான மற்றும் வசதியான சூழலை உருவாக்குவதை உறுதிசெய்ய, இந்தியன் செட்டில்மெண்ட் கிராமத்தின் மறுமேம்பாட்டுக்கான ஆய்வுகள் மற்றும் திட்டமிடல்களை சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பத்துமலையில் உள்ள இந்திய செட்டில்மெண்ட் கிராமத்தை மறுசீரமைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் மாநில அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தது. முறையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வசதியான குடியிருப்புகளை வழங்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
செலாயாங் நகராட்சி மன்றத்தால் (MPS) செயல்படுத்தப் படும் இத்திட்டத்தில், 2.5 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலைகளை அகலப்படுத்துதல், தெருவிளக்குகள் பொருத்துதல் மற்றும் அப்பகுதியில் உள்ள வெள்ளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் புதிய வடிகால் அமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உட்படப் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இத்திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாநில அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள இந்த மறுகுடியமர்வின் ஒரு பகுதியாக அவர்கள் பத்து ஆராங்கிற்கு (Batu Arang) மாற்றப்படுவார்கள்.
பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் மக்களின் மறுகுடியமர்வு பணிகள் நிறைவடைந்தன - மந்திரி புசார்
30 மே 2026, 7:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஒப்புக்கல்ல, ருக்குன் நெகாராவை ஆழமாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்: மந்திரி புசார் வலியுறுத்தல்
Pakiya
21 மே 2026

selangor
வசதிக்கேற்ப அரசியல் லாபத்திற்கு விசுவாசத்தைக் காட்டுவதை நிறுத்துங்கள்: மந்திரி புசார் திட்டவட்டம்
Pakiya
21 மே 2026

video
Projek mitigasi banjir mula tunjuk hasil, lokasi berisiko tinggi kini terkawal
Kathiravan Manoharan
27 ஏப்ரல் 2026

health
பெட்டாலிங் ஜெயாவில் பொது மருத்துவமனையின் தேவை மிகவும் அவசரம், மற்ற மாவட்டங்களுக்கும் கவனம் செலுத்தப்படும்: மந்திரி புசார்
Pakiya
30 மே 2026

உங்கள் கருத்து என்ன?




