ஏழு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

29 மே 2026, 9:55 AM
ஏழு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 29: மலேசியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் கெடா மாநிலத்தின் சிக் மற்றும் பாலிங் ஆகிய இடங்களிலும், கிளந்தான் மாநிலத்தின் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங் மற்றும் பாசிர் பூத்தே ஆகிய பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரங்கானு மாநிலத்தின் பெசுட் மற்றும் செத்தியூ ஆகிய இடங்களிலும் இதே போன்ற சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபு, கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய இடங்களும், ஜோகூர் மாநிலத்தின் தாங்காக், செகாமட், மூவார், பத்து பகாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களும் இந்த வானிலையால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் சிபு, முக்கா (மாத்து, டலாட் மற்றும் முக்கா), காபிட் (சோங் மற்றும் காபிட்), பிந்துலு (தாதாவ்) மற்றும் மிரி (சுபிஸ், பெலுரு, மிரி மற்றும் மருதி) ஆகிய பகுதிகளில் இந்த மோசமான வானிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதே வேளையில், சபா மாநிலத்தில் உட்பகுதி (தம்புனான்), மேற்கு கடற்கரை பகுதிகள், சண்டக்கான் (தெலுபிட், கினபாத்தாங்கான், பெலூரான் மற்றும் சண்டக்கான்) மற்றும் கூடாட் (கோத்தா மாருடு) ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.