கோலாலம்பூர், மே 26: மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசமான வானிலை பெர்லிஸ் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், கெடா மாநிலத்தில் குபாங் பாசு, பாடாங் தெராப், சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய மாவட்டங்களும், பினாங்கில் செபராங் பிறை செலாத்தான் பகுதியும் இதனால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் கிரியான், லாருட், மாடாங் டான் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா மற்றும் கம்பார் ஆகிய இடங்களில் இதே போன்ற மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிளாந்தானில் ஜேலி மற்றும் தானா மேரா ஆகிய பகுதிகளுக்கும், திராங்கானுவில் உலு திராங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் ஆகிய இடங்களுக்கும் இதே போன்ற முன்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தில் கேமரன் மலை, லிப்பிஸ் மற்றும் குவாந்தான் ஆகிய பகுதிகளுக்கும், சிலாங்கூரில் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கில் கூச்சிங் (பாவ் மற்றும் கூச்சிங்), செரியான், சமரஹான் மற்றும் மிரி (சுபிஸ், பெலுரு, மிரி மற்றும் மாருடி) உள்ளிட்ட பல மாவட்டங்களை இந்த மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாவில் உள்பகுதி (கோலா பென்யு, போஃபர்ட், நாபாவான் மற்றும் தம்புனான்), மேற்கு கடற்கரை, தாவாவ் (தாவாவ், குனாக் மற்றும் லாஹாட் டத்து), சண்டக்கான் (தெலுபிட், கினபதாங்கான், பெலூரான் மற்றும் சண்டக்கான்) மற்றும் கூடாட் ஆகிய இடங்களிலும் இந்த நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







