2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இணையவழி 587,801 வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன

26 மே 2026, 2:44 AM
2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இணையவழி 587,801 வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன

புத்ராஜெயா, மே 26: கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் இணையவழியில் மொத்தம் 587,801 வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என்று மலேசியப் புள்ளியியல் துறை (DOSM) அதன் ‘பிக் டேட்டா அனலிட்டிக்ஸ்: 2025-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டிற்கான மலேசிய இணையவழி வேலைவாய்ப்பு சந்தை குறித்த பகுப்பாய்வு’ (Big Data Analytics: Job Market Insights) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 77,615 ஆக இருந்த வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை, நான்காம் காலாண்டில் 80,287 ஆக அதிகரித்துள்ளது என தலைமைப் புள்ளியியலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மாஹிதின் கூறினார்.

"இணையவழி வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் தொழில்முறை (Professional) பிரிவைச் சார்ந்தே அமைந்திருந்தன. இது ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 46.4 விழுக்காடு அல்லது 272,698 ஆகும். முன்னதாக, 2025 மூன்றாம் காலாண்டில் இப்பிரிவில் 268,178 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன," என்று அவர் குறிப்பிட்டார்.

"தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் இணைத் தொழில்முறை நிபுணர்களுக்கான (Technicians and associate professionals) பிரிவில் 93,358 வேலைவாய்ப்புகளும், அதைத் தொடர்ந்து மேலாளர்களுக்கான பிரிவில் 88,080 வேலைவாய்ப்புகளும் பதிவாகியுள்ளன," என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கான தேவை அதிக அளவில் காணப்படுவதாகவும், இப்பிரிவில் 42,411 வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு 36,656 வேலைவாய்ப்புகளும்; இணை நிர்வாக நிபுணர்களுக்கு 29,569 வேலைவாய்ப்புகளும்; நிர்வாக நிபுணர்களுக்கு 22,093 வேலைவாய்ப்புகளும்; கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு 20,111 வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்புச் சந்தையில் சேவைத் துறையானது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறிய அவர், 2025 மூன்றாம் காலாண்டில் 77.2 விழுக்காடாக இருந்த இத்துறையின் வேலைவாய்ப்பு விகிதம், நான்காம் காலாண்டில் 84.4 விழுக்காடாக அல்லது 496,065 வேலைவாய்ப்புகளாக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.