கோத்தா பாரு, மே 21: நேற்று ஜெலி, லடாங் சாவிட் ஜெரிம்போங் அருகே உள்ள சிற்றோடைப் பகுதியில் ஆற்றங்கரை மண் சரிந்து விழுந்ததில் இரு ஆடவர்கள் புதையுண்டு உயிரிழந்தனர்.
நேற்றிரவு 8.20 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை தளபதி இசுவான் சே இப்ராஹிம் தெரிவித்தார்.
32 மற்றும் 38 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் இரண்டு மீட்டர் ஆழமுள்ள மண்ணில் புதையுண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டதாக அவர் கூறினார்.
"முதல் பலியானவரின் சடலம் நேற்றிரவு 9.25 மணிக்கும், இரண்டாவது பலியானவரின் சடலம் இரவு 11.18 மணிக்கும் மீட்கப்பட்டது," என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் மேல் நடவடிக்கைக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மண் சரிவில் சிக்கி இருவர் பலி
21 மே 2026, 5:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
எக்ஸ்கவேட்டருடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
Pakiya
21 மே 2026

national
ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
Rajah Ramaya
22 செப்டெம்பர் 2025

national
தம்பியைத் தேடிச் சென்ற போது நேர்ந்த துயரம் - மின்னல் தாக்கி வங்காளதேச ஆடவர் மரணம்
Rajah Ramaya
9 செப்டெம்பர் 2025

national
கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் மரணம் - சந்தேக நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
Rajah Ramaya
12 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




