ஷா ஆலம், மே 21: இங்கு நேற்று நள்ளிரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தான் ஓட்டிச் சென்ற வாகனம் எக்ஸ்கவேட்டருடன் (மண் அள்ளும் இயந்திரம்) மோதியதில், அந்த கனரக இயந்திரத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நள்ளிரவு 12.06 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
நிர்வாகம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு (எம்.எஸ்.யு - MSU) அருகில் உள்ள சீனி ஆலை நாற்சந்தியை நோக்கி ஷா ஆலமிலிருந்து செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
“யமஹா ஒய் 15 (Yamaha Y15) ரக மோட்டார் சைக்கிள் ஒன்று எக்ஸ்கவேட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இயந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதை உறுதிப் படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் இயந்திரத்தின் அடியில் சிக்கியிருந்த உடலை மீட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக அகமட் முக்லிஸ் கூறினார்.
ஷா ஆலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மற்றும் ஃபயர் ரெஸ்கியூ டெண்டர் (FRT) சிட்ராக் இயந்திரம் ஒன்றும் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எக்ஸ்கவேட்டருடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
21 மே 2026, 5:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மண் சரிவில் சிக்கி இருவர் பலி
Pakiya
21 மே 2026

national
ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
Rajah Ramaya
22 செப்டெம்பர் 2025

national
தம்பியைத் தேடிச் சென்ற போது நேர்ந்த துயரம் - மின்னல் தாக்கி வங்காளதேச ஆடவர் மரணம்
Rajah Ramaya
9 செப்டெம்பர் 2025

national
கத்தியால் குத்தப்பட்டு இளைஞர் மரணம் - சந்தேக நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
Rajah Ramaya
12 ஆகஸ்ட் 2025

உங்கள் கருத்து என்ன?




