பொருளாதார அரசதந்திரத்தை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் மலேசிய தூதர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

21 மே 2026, 1:42 AM
பொருளாதார அரசதந்திரத்தை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் மலேசிய தூதர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
பொருளாதார அரசதந்திரத்தை வலுப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் மலேசிய தூதர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

ஷா ஆலம், மே 21: மலேசிய தூதர்கள் நாட்டின் பொருளாதார அரசதந்திரத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக உயர்தர முதலீடுகளை ஈர்ப்பதில், அனைத்துலக அளவில் உத்திபூர்வ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

தூதரகப் பிரதிநிதிகளின் பங்கு தற்போது நாடுகளுக்கிடையிலான அதிகாரபூர்வ உறவுகளை நிர்வகிப்பது மட்டுமல்ல; இருதரப்பு உறவுகள் மிகவும் பயனுள்ளதாக அமை வதை உறுதி செய்ய, அந்தந்த உள்ளூர் வரலாறு, கலாச்சாரம், அரசியல் அமைப்பு மற்றும் சமூகத்தை புரிந்து கொள்வதும் அவசியமாகும் என்று அவர் கூறினார்.

மேலும், நாளுக்கு நாள் சவாலாகவும் சிக்கலாகவும் மாறிவரும் புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள நமது நாட்டின் தூதர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"ஒரு தூதரின் பங்கு நெறிமுறைகள் மற்றும் அதிகாரபூர்வ உறவுகளைக் கையாளுவதற்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு ஈடுபாடும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமானால், உள்ளூர் வரலாறு, கலாச்சாரம், அரசியல் அமைப்புகள் மற்றும் சமூக நுணுக்கங்கள் குறித்து ஆழமான புரிதல் தேவை," என அவர் தனது முகநூல் பதிவின் வாயிலாகக் குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு உத்திபூர்வமான பிராந்தியங்களில் நாட்டைப் பிரதிநிதித்துச் செயல்படும் பொறுப்பை ஏற்க விருக்கும் 13 மலேசியத் தூதரகப் பிரதிநிதிகளின் தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்த போதே அன்வார் இவ்வாறு கூறினார்.

இளைய தலைமுறைத் தூதர்கள் பரந்த அறிவு, கூர்மையான சிந்தனை மற்றும் உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, அவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டி ஆற்றல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அதோடு, உலக அரங்கில் நாட்டின் குரலை ஒலிக்கும் வகையில், நிலைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் உலகளாவிய மனிதநேய விழுமியங்களை வலியுறுத்தும் அரசதந்திர அணுகுமுறையை மலேசியா தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.