பந்திங் சட்டமன்றத் தொகுதி: எஸ்பிஎம் தேர்வில் சாதனை படைத்த 30 மாணவர்களுக்குப் பாராட்டு விழா

18 மே 2026, 1:36 AM
பந்திங் சட்டமன்றத் தொகுதி: எஸ்பிஎம் தேர்வில் சாதனை படைத்த 30 மாணவர்களுக்குப் பாராட்டு விழா

ஷா ஆலாம், மே 18 – கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பந்திங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 30 மாணவர்கள், டேவான் ஸ்ரீ ஜுக்ராவில் நடைபெற்ற 'எஸ்பிஎம் சிறந்த மாணவர் விருது வழங்கும் விழாவில்' சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த மாணவர்கள் பெற்ற வெற்றிகள் குறித்துப் பேசிய பந்திங் சட்டமன்ற உறுப்பினர் (ADN) பாப்பாராய்டு வீரமன், மொத்தம் பாராட்டு பெற்ற 30 மாணவர்களில், நான்கு மாணவர்கள் 11ஏ பெற்றும், 10 மாணவர்கள் 10ஏ பெற்றும் அசாத்திய சாதனை படைத்துள்ளனர் என்றார்.

இவர்களைத் தொடர்ந்து 12 மாணவர்கள் 9ஏ மற்றும் நான்கு மாணவர்கள் 8ஏ பெற்று இந்தச் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளனர் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த மாபெரும் வெற்றியானது, மாணவர்களின் அயராத உழைப்பை மட்டும் பறைசாற்றவில்லை, மாறாக தங்களின் பிள்ளைகளின் கல்விக்காகத் தியாகங்களைச் செய்த பெற்றோர்களின் ஆதரவையும், மாணவர்களைச் சரியான பாதையில் வழிநடத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் தெளிவாக நிரூபிக்கிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

"2025 எஸ்பிஎம் தேர்வில் பெருமைக்குரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

இவர்களின் இந்தச் சாதனை, மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமைந்து, கல்வி மற்றும் நற்பண்பு ஆகிய இரண்டிலும் தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என பாப்பாராய்டு குறிப்பிட்டுள்ளார்.

அதே விழாவில், பள்ளி அளவிலும் பல்வேறு போட்டிகளிலும் பாடத்திட்டம் (curriculum) மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் (co-curriculum) சிறப்பாகப் பங்கேற்ற 48 மாணவர்களுக்கு, அவர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவிப்பு நிதியுதவிகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், பந்திங் சட்டமன்றத் தொகுதி அளவிலான ‘சிலாங்கூர் சாரிங்’ (Selangor Saring) இலவச உடல்நலப் பரிசோதனைத் திட்டத்தையும் பாப்பாராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இத்திட்டம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தற்காத்துக் கொள்ளவும், மக்கள் மத்தியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்று அவர் கூறினார்.

மக்களின் நல்வாழ்வையும் சிறந்த எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, கல்வி மேம்பாடு, இளைஞர் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சுகாதாரத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதில் சிலாங்கூர் மாநில அரசு என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.