ஷா ஆலம், ஏப்ரல் 27: சிலாங்கூர் மக்கள் சமூக ஊடகங்களை முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் பயன்படுத்த வேண்டும் என்று ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
சூழலை மோசமாக்கக்கூடிய ஆதாரமற்ற அல்லது ஆத்திரமூட்டும் உள்ளடக்கங்களால் மக்கள் எளிதில் ஈர்க்கப்பட வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.
"நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையை வலுப்படுத்தி, நல்லிணக்கத்தைப் பேணி, சிலாங்கூர் அமைதியான, நிலையான மற்றும் வளமான மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்வோம்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் சுல்தான், மாண்புமிகு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களைக் தொடர்புபடுத்தி, அரசவை சடங்கு உடை அணிந்த பன்றியின் படம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
சிலாங்கூரில் மக்களின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கக்கூடிய தற்போதைய சூழ்நிலைகளின் வளர்ச்சி குறித்து ரிசாம் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
"இதுவரை, நமது பலம் மக்களிடையே உள்ள பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் வலுவான ஒற்றுமை உணர்வில் தங்கியுள்ளது."
"அரச நிறுவனத்தை பொறுப்பற்ற விஷயங்களுடன் தொடர்புபடுத்தி, சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அவதூறு, ஆத்திரமூட்டல் அல்லது எந்தவொரு உள்ளடக்கத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
எனவே, சட்ட மீறல்கள் நியாயமாகவும் திறமையாகவும் கையாளப்படுவதை உறுதிசெய்ய, அதிகாரிகள் உடனடியாகத் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பொறுப்பற்ற தரப்பினர் தங்கள் நிறுவனத்தின் சின்னத்தைப் பயன்படுத்தியதால், இந்த இடுகையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஓரியண்டல் டெய்லி என்ற சீன மொழி செய்தி இணையதளம் மறுத்துள்ளது.
முன்னதாக, முதலீட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் தசே ஹான், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நாட்டின் சட்ட விதிகளுக்கு ஏற்ப கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
கலாச்சாரத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா, நாட்டில் நடைமுறையில் உள்ள பேச்சு சுதந்திரம் எந்தத் தரப்பினரையும், குறிப்பாக அரச நிறுவனத்தை அவமதிப்பதற்கான உரிமம் அல்ல என்றார்.
அதே நேரத்தில், இஸ்லாமிய சமயத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபஹ்மி ஙா, சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான அவதூறான உள்ளடக்கங்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகளைக் கண்காணிக்கவும், தடுக்கவும் மற்றும் அகற்றவும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தை (SKMM) வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மக்கள் சமூக ஊடகங்களை முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் பயன்படுத்த வேண்டும்
27 ஏப்ரல் 2026, 2:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சுக்மா 2026 திட்டமிட்டபடி தொடரும்: சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலுக்கு பினாங்கு அரசு நன்றியைத் தெரிவித்தது
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

sukankini
சுக்மா 2026 : சிறிய அளவிலாவது போட்டிகளை நடத்த கிளந்தான் அரசு கோரிக்கை
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
சுக்மா போட்டிகளை ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான் விடுத்த ஆணை: முழுமையாக ஆராய்ந்து, உடனடியாக முடிவெடுக்க வேண்டும்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

selangor
புக்கிட் கெமுனிங்கில் சோதனை: உரிமம் இன்றி இயங்கிய கடைகள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




