புக்கிட் கெமுனிங்கில் சோதனை: உரிமம் இன்றி இயங்கிய கடைகள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

27 ஏப்ரல் 2026, 4:15 AM
புக்கிட் கெமுனிங்கில் சோதனை: உரிமம் இன்றி இயங்கிய கடைகள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 27: கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, புக்கிட் கெமுனிங், பிரிவு 32, ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், உரிமம் இல்லாத வணிக வளாகங்கள் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாத வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்திய தொழில்முனைவோர் மீது ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ)அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்தச் சோதனையின் போது ஆறு வளாகங்கள் சம்பந்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் நான்கு வளாகங்கள் செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்ததும், உரிமம் பெற்றிருந்த இரண்டு வளாகங்கள் உரிம நிபந்தனைகளை மீறியதும் தெரிய வந்ததாக உள்ளூராட்சி மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சம்பந்தப்பட்ட அனைத்து வளாகங்களையும் மூடுவது, மூன்று வளாகங்களில் இருந்த உபகரணங்களைப் பறிமுதல் செய்வது, மற்றும் செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரைப் பணியமர்த்தியதற்காக இரண்டு வணிக உரிமங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதே நடவடிக்கையில், சிலாங்கூர் மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) 22 நபர்களைச் சோதனையிட்டதுடன், குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ் முறையான ஆவணங்கள் இல்லாத 16 வெளிநாட்டினரை மேல் விசாரணைக்காகக் கைது செய்தது."

காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கைக்கு,
எம்பிஎஸ்ஏ அமலாக்கத் துறை இயக்குனர் சஹ்ருல் நிஜாம் அஹ்மட், எம்பிஎஸ்ஏ மாமன்ற உறுப்பினரும், மண்டலம் 14, பிரிவு 32b மக்கள் பிரதிநிதித்துவ மன்றத்தின் (MPP) தலைவருமான யோகேஸ்வரி சாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த நடவடிக்கையில் கோத்தா கெமுனிங்
எம்பிஎஸ்ஏ கிளை அலுவலகம், எம்பிஎஸ்ஏ உரிமத் துறை, எம்பிஎஸ்ஏ பெருநிறுவன மற்றும் பொதுத் தொடர்புத் துறை மற்றும் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.