ஷா ஆலம், ஏப்ரல் 17: ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து எரிபொருள் ஏற்றிவந்த மலேசியக் கப்பல் ஒன்று நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மற்றொரு கப்பல் மலேசியக் கடல் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் இதுவரை இரண்டு கப்பல்கள் அந்த கடல் வழியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஏழு கப்பல்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள துறைமுகத்திலிருந்து புறப்பட முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, அந்த ஜலசந்தியைக் கடக்காத மீதமுள்ள ஐந்து கப்பல்களின் நடமாட்டத்தையும் அரசாங்கம் கண்காணித்து வருகிறது.
"ஒரு கப்பல் வந்துவிட்டது, இன்னொன்று மலேசியக் கடல் பகுதிக்குள் நுழையவிருக்கிறது. ஆக, இரண்டு கப்பல்கள் வந்துவிட்டன. மற்றவை, புதிய முடிவுகளின்படி ஏற்கனவே புறப்பட்டிருந்தாலும், நாம் இன்னும் கண்காணித்து வருகிறோம்."
"ஒப்புதலைப் பொறுத்தவரையில், ஈரான் நமது ஏழு கப்பல்களுக்கும் (ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க) ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், ஒரு கப்பலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது துறைமுகத்திலிருந்து புறப்பட முடியவில்லை."
"இந்த சமீபத்திய சூழல் காரணமாக, நாங்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம்," என்று இன்று சைபர்ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைமையகத்தில்(பிபிபி) செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பாரசீக வளைகுடாவிற்கும் அரபிக் கடலுக்கும் இடையிலான இந்த குறுகிய கடல் பாதை, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட ஆயுத மோதல் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமாக விளங்கும் நிலையில், பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது.
உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தினசரி இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. போர் காரணமாக இடையூறு ஏற்பட்டால், சவுதி அரேபியா, குவைத், ஈராக் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிவரும் பெரிய கொள்கலன் கப்பல்கள் வெளியேற முடியாத சூழல் உருவாகலாம்.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சுமார் 20,000 மாலுமிகளும், 2,000 கப்பல்களும் சிக்கித் தவிப்பதாக அனைத்துலக கடல்சார் அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது.
சுமார் 30 கிலோமீட்டர் மட்டுமே குறுகியதாக இருக்கும் இப்பாதையில், நாடுகளிடையே கவனமான ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாலும், உயர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாலும், ஒரே நேரத்தில் அனைத்தையும் வெளியேற்றும் செயல்முறை கடினமாக உள்ளது.
ஹார்முஸ் நீரிணை: எரிபொருள் ஏற்றிய மலேசியக் கப்பல் தாயகம் திரும்பியது; பிரதமர் அன்வார் தகவல்
17 ஏப்ரல் 2026, 8:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் உணவு இருப்பு சீராக உள்ளது: மத்திய கிழக்கு பதற்றத்தால் விலை உயரும் அபாயம் குறித்து அரசு எச்சரிக்கை
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனே முக்கியம் - பிரதமர் அன்வார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம்: 6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு – அரசாங்கம்
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

selangor
டீசல் விலை உயர்வு– செயல்பாடுகளைத் தொடர KDEBWM தீவிரம்
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




