ஷா ஆலம், ஏப்ரல் 5: பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை கார் ஸ்டீயரிங் பூட்டைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறுகையில், சந்தேக நபருக்கும் பாதிக்கப் பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
தாக்குதலில் காயமடைந்த 40 வயதுடைய உள்ளூர் ஆடவரான பாதிக்கப்பட்டவர், ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அதிகாலை 4.18 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
"சந்தேக நபர் ஒரு மழுங்கிய பொருளைக் கொண்டு பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் செயல்பட்ட காவல்துறை, சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ததுடன், சம்பவத்தில் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் கார் ஸ்டீயரிங் பூட்டையும் பறிமுதல் செய்தது.
மேலதிக விசாரணையில், 40 வயதுடைய அந்த சந்தேக நபருக்கு எட்டு குற்றப் பதிவுகளும், போதைப்பொருள் தொடர்பான இரண்டு பதிவுகளும் இருப்பது தெரியவந்தது.
கொலைக் குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
https://mediaselangor.com/ms/2026/04/350675
கார் ஸ்டீயரிங் பூட்டால் பாதுகாவலரைக் கொன்ற ஆடவர் கைது
5 ஏப்ரல் 2026, 11:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
காவல்துறை அதிகாரி போல ஆள்மாறாட்டம்: சமூக வலைத்தளத்தில் சிக்கிய நபர் கைது
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

selangor
சமூக ஊடகங்களில் MAIS பற்றி அவதூறு பரப்பியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது போலீஸ் விசாரணை
Pakiya
19 ஏப்ரல் 2026

national
30 தேசத் துரோக வழக்குகள் மீது காவல்துறை விசாரணை; சமூக ஊடகப் பயனர்களுக்கு எச்சரிக்கை
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

national
பி.டி.ஆர்.எம் ரோந்துப் பணியாளர்களுக்கு உடல் கேமராக்கள் விநியோகம்
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




