கேரி தீவு மூன்றாவது துறைமுக மேம்பாட்டிற்கு அமைச்சரவை வழங்கிய ஒப்புதலை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்தத் திட்டம்,உலக முக்கிய கடல்சார் மையங்களில் ஒன்றாகக் கிள்ளான் துறைமுகத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த ஒப்புதல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, தற்போது உலகின் முதல் 10 முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும் கிள்ளான் துறைமுகத்தின் திறனை இது மேலும் உயர்த்தும் என்றார்.
2024-ஆம் ஆண்டில் கிள்ளான் துறைமுகம் சுமார் 14.64 மில்லியன் இருபது அடிக்கு சமமான கொள்கலன் அலகுகளை (TEU) கையாண்டதாக அவர் குறிப்பிட்டார். இது உலகளாவிய வர்த்தகச் சங்கிலியில் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
"சிலாங்கூர், கேரி தீவில் மூன்றாவது துறைமுகம் மேம்படுத்துவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை மாநில அரசு வரவேற்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, உலகின் முதல் 10 முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான கிள்ளான் துறைமுகத்தின் நிலையை மேலும் உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் துறைமுக மேம்பாட்டுக்கான முயற்சிகளை மாநில அரசு 2023-ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருவதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இது உச்சக்கட்டத்தை எட்டியதாகவும் அமிருடின் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN) மற்றும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) தலைமையில் 'கேரி தீவு துறைமுக மேம்பாட்டுப் பெருந்திட்டம்' தயாரிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பயன்பாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொதுப் போக்குவரத்து, டிஜிட்டல் இணைப்பு, தொழில்துறை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மேம் பாடுகளை இந்தப் பெருந்திட்டம் உள்ளடக்கும். அதே வேளையில், மலாய் ஒதுக்கீடு நிலங்கள் மற்றும் கேரி தீவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட உள்ளூர் சமூகங்களின் நலன் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்யும்.
"இந்த மேம்பாட்டைச் சிறந்த முறையில் செயல் படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட பகுதியில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கும் போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாநில அரசு உறுதி பூண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
இந்தத் துறைமுகத்தின் மேம்பாடு, மலேசியா-விற்கு மட்டுமல்ல, தென்கிழக்காசியப் பிராந்தியத்திற்கும் பொருளாதார வாய்ப்புக-ளுக்கு முக்கிய நுழைவாயிலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரி தீவு - துறைமுக மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலை சிலாங்கூர் மாநிலம் வரவேற்கிறது
14 மார்ச் 2026, 5:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் சிக்கன நடவடிக்கையாகத் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதிகாரப் பூர்வ அழைப்புகள் மீது மறுஆய்வு
Pakiya
4 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூர் தீவிர வறுமையை ஒழித்தது, RS-2 வழி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
Pakiya
23 ஏப்ரல் 2026

selangor
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ளவும், சிலாங்கூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் RS-2 திட்டம்
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

selangor
ஆதாரங்களுடன் விவாதித்து, சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காத்திடுங்கள் - சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை
Pakiya
21 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




