ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது நடைபெறும் ஒவ்வொரு விவாதமும் உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மாநில சட்டமன்றத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்தும் வகையில், விவாதங்கள் நேர்மையாகவும், நடுநிலையாகவும், பண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்று சட்டமன்ற நாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
பொதுச் சேவையின் சிறப்பு மற்றும் மாநில வளர்ச்சிக்கான அரசியல் ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் மாட்சிமை தங்கிய சுல்தானின் உரையின் சாராம்சத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழுப் பொறுப்புடன் ஆராய்ந்து விவாதிப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
"சுல்தானின் உரையின் சாராம்சம், பொதுச் சேவையில் சிறந்து விளங்கவும், மாநில வளர்ச்சிக்கு அரசியல் நிலைத் தன்மையை நிலைநிறுத்தவும் கோரும் அவரது தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும்," என்றார்.
"சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலன் மீதான சுல்தானின் அக்கறை, அவரது ஆட்சியில் மக்கள் நலனே முதன்மையானது என்பதையும் நிரூபிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று இரவு இங்குள்ள கான்கோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற 15 வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த அரச விருந்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விருந்து பசரிப்பில் மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், மாட்சிமை தங்கிய சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் மாண்புமிகு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தற்போதைய அழுத்தங்கள் அல்லது எதிர் வினைகளால் பாதிக்கப்படாமல், அனுபவத் தரவுகள் மற்றும் உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டமன்ற நிறுவனத்தை வலுப் படுத்த தமக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப் பட்டதற்கு வெங் சான் நன்றி தெரிவித்தார்.
"மீடியா சிலாங்கூர் நேரடி ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர்கள் மூலம் சிலாங்கூர் மக்கள் எங்களைக் கவனித்து வருகிறார்கள் என்பதை எனக்கும் எனது சட்டமன்ற உறுப்பினர் நண்பர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்."
"எனவே, நேர்மை என்பது மிக அவசியம். மாநிலத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் மக்களின் எதிர் பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்த இந்த மன்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்," என்று அவர் கூறினார்.
ஆதாரங்களுடன் விவாதித்து, சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காத்திடுங்கள் - சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை
21 ஏப்ரல் 2026, 10:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor pergiat saringan awal warga emas, kesan penyakit kronik lebih awal
Kathiravan Manoharan
24 ஏப்ரல் 2026

sukankini
சுக்மா 2026 ஒத்திவைப்பு: சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின் மாநில அரசு முடிவெடுக்கும்
Shalini Rajamogun, Dewi Abdul Rahman
20 ஏப்ரல் 2026

selangor
மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த தனியார் துறையின் ஒத்துழைப்பை சிலாங்கூர் மாநில அரசு ஊக்குவிக்கிறது
Mavitthran
24 நவம்பர் 2025

selangor
உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், எய்டில்ஃபிட்ரிக்கு முன்னதாக ஒற்றுமையையும் மிதவாத்த்தையும் எம். பி வலியுறுத்தினார்
Pakiya
17 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




