ஷா ஆலாம், மார்ச் 12: கோலா லங்காட் நகராட்சி மன்றம் (எம்பிகேஎல்), பந்திங் மற்றும் தெலுக் பங்லிமா காராங் பகுதிகளில், மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் லெமாங் மற்றும் வானவேடிக்கை விற்பனைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட. வணிக நடவடிக்கைகள் உரிம நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
எம்பிகேஎல்-இன் உரிமத் துறை, அமலாக்கத் துறை மற்றும் கருவூலத் துறையின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வியாபாரிகளிடம் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் உள்ளதா என்பதையும், அரச மலேசியக் காவல்துறை (பிடிஆர்எம்) மற்றும் எம்பிகேஎல் அனுமதித்த இடங்களில் மட்டுமே அவர்கள் வணிகம் செய்வதையும் உறுதிசெய்ய இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக எம்பிகேஎல் முகநூல் அறிக்கை கூறியது.
இந்த நடவடிக்கையின் விளைவாக, எம்பிகேஎல் உரிமத் துறையால் 17 வானவேடிக்கை விற்பனை அனுமதிகளும், ஒரு லெமாங் விற்பனை அனுமதியும் வழங்கப்பட்டன. மேலும், உரிம நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 14 வியாபாரிகளுக்கு வானவேடிக்கை விற்பனைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
அதோடு, உரிமமின்றி வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப் பட்டன. அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான, விதிமுறைகள் பின் பற்றப்படுவதை உறுதிசெய்ய, இந்த கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று எம்பிகேஎல் தெரிவித்தது.
பந்திங், தெலுக் பங்லிமா காராங் பகுதிகளில் லெமாங், வாணவேடிக்கை விற்பனையை எம்பிகேஎல் கண்காணிப்பு
12 மார்ச் 2026, 6:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய நெருக்கடியிலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்: சிலாங்கூர் மாநில அரசு உறுதி
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
12 ஏப்ரல் 2026

national
காவல்துறை அதிகாரியை நோக்கி இறைச்சி வெட்டும் கத்தியை வீசிய ஆடவர் கைது
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

selangor
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் 300 மாணவர்கள் நிதியுதவி பெற்றனர்
Shalini Rajamogun
29 மார்ச் 2026

selangor
பந்திங்கில் வழிப்பறி கொள்ளையில் ஒருவர், வாகனம், பணம், உடமைகளையும் இழந்தார்
Pakiya
11 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?






