ஷா ஆலம், மார்ச் 29: பந்திங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300 மாணவர்கள், இன்று நடைபெற்ற எம்.பி.ஐ. 2026க்கான மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றனர்.
இப்பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, குறிப்பாக பள்ளி ஆரம்பக் கட்ட முன் ஏற்பாடுகளுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராயுடு கூறுகையில், இந்த திட்டம் பெற்றோரின் சுமையைக் குறைப்பதோடு, மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்தை மேலும் தயார்நிலையுடன் தொடங்க ஊக்கமளிக்கிறது என்றார். இந்த உதவி, மாணவர்கள் நிதி நெருக்கடியின்றி பள்ளிப் பருவத்தைத் தொடங்க உதவும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"டத்தோ மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு, நிதிப் பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் கல்வியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும்," என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், இந்த திட்டம் மக்களின் நலனை, குறிப்பாக கல்வி அம்சத்தில், பேணுவதில் மாநில அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும் என்று வலியுறுத்தினார்.
"தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த முயற்சி உதவுவதோடு, பிள்ளைகள் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது," என்றார் அவர்.
இதற்கிடையில், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த உதவிய பந்திங் சட்டமன்ற மக்கள் சேவை மைய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம், சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் கல்விக்கான அணுகல் மேலும் உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும் இருப்பதை மாநில அரசு தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது.
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் 300 மாணவர்கள் நிதியுதவி பெற்றனர்
29 மார்ச் 2026, 2:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய நெருக்கடியிலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்: சிலாங்கூர் மாநில அரசு உறுதி
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
12 ஏப்ரல் 2026

selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
இலவச திவேட் (TVET) பயிற்சி: சிலாங்கூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டம்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் 285 கோயில்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?





