சபாக் பெர்ணம், ஆகஸ்ட் 29: கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி (TVET) ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக யாயாசான் ராஜா மூட சிலாங்கூர் (YRMS) மூலம் சுமார் 3,800 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
அதாவது 2003 இல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, திறன் துறையில் நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமைகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என யாயாசான் ராஜா மூட சிலாங்கூரின் குழுவின் தலைவர், ராஜா தான் ஸ்ரீ அர்ஷாட் ராஜா துன் உடா கூறினார்.
"கல்வியில் விருப்பம் இல்லாத, ஆனால் மறைக்கப்பட்ட திறமைகள் மற்றும் திறன்களைக் கொண்ட விளிம்புநிலை இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.
"இத்திட்டம் 16 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை மற்றும் அவர்களின் திறமைகளை வளர்த்து வேலை பெற உதவுவதன் மூலம் அவர்களை ஆதரிக்கிறது," என்று அவர் கூறினார்.
இளைஞர்களுக்கு மூன்று திட்டங்கள் ஏற்பாடு செய்யப் படுள்ளன. அவை சுய ஆய்வு பட்டறைகள், திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் உலகளாவிய திறமை ஆகியவையாகும் என ராஜா தான் ஸ்ரீ அர்ஷாட் கூறினார்.








