SELANGOR

மறைந்த முன்னாள் வீட்டுவசதி அமைச்சரின் குடும்பத்தினருக்கு சுல்தான் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

27 ஜூலை 2024, 11:36 PM
மறைந்த முன்னாள் வீட்டுவசதி அமைச்சரின் குடும்பத்தினருக்கு சுல்தான் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ஷா ஆலம், ஜூலை 27: மறைந்த முன்னாள் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் துன் மைக்கேல் சென் விங் சுமின் குடும்பத்தினருக்கு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர், தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் இரங்கல் தெரிவித்தார்.

சிலாங்கூர் ராயல் அலுவலகத்தின் முகநூலில் ஒரு பதிவின்படி, MCA இன் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மறைந்த அவர் மக்களுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்ட ஒரு அரசியல்வாதி என மாட்சிமை மிக்க அரசர் நினைவு கூறினார்.

"அவரது வாழ்நாளில் அவரது சேவைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக, 1977 இல், மறைந்த சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா டத்தோ படுகா மஹ்கோத்தா சிலாங்கூர் (டி.பி.எம்.எஸ்) என்ற பட்டம் வழங்கினார்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, MCA ம.சீ.ச  தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியோங் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் சென் தனது 92 வயதில் தனது இறுதி மூச்சை விட்டதை உறுதிப்படுத்தினார்.

வீயின் கூற்றுப்படி, இறந்தவர் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை 'பிங் பாங் ராஜதந்திரம்' மூலம் எளிதாக்குவதிலும், இரு நாடுகளுக்கு இடையே முன்னேற்றத்தையும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும் கொண்டு வந்து உறவுகளை மேலும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.