SELANGOR

நாளை சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடு

26 ஜூலை 2024, 4:32 AM
நாளை சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 26: ஜூலை மாதம் பிறந்த வயது 5 முதல் 12 க்கு உட்பட்ட பிள்ளைகளின்  பிறந்த நாள், சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில்  கொண்டாடப்படும்.

நாளை தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும்  வாய்ப்பு  முன் கூட்டியே பதிந்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு  வழங்கப்படவுள்ளது.

இதில் 30 குழந்தைகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் பங்குபெறும் குழந்தைகள் பச்சை அல்லது மஞ்சள் ஆடையை அணிந்திருக்க வேண்டும்.

மேலும், இந்த நிகழ்வு ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகத்தின் மேடையில் கொண்டாடப்படும் என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) தெரிவித்துள்ளது.

“ஜூலை மாதம் பிறந்த குழந்தைகளுக்கான இந்நிகழ்வில் பதிவு செய்ய போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

“ஜூலை 24 முதல் 28 வரை ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாகத்தில் சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் எங்களையும் எங்கள் ஏஜென்சி பார்ட்னர்களையும் சந்திக்க  திரளாக வாருங்கள்” என்று பிபிஏஎஸ் அழைக்கிறது.

கேக் வெட்டும் முக்கிய நிகழ்வு தவிர, கேரி ஜூனியருடன் நடவடிக்கைகள், கோமாளி நிகழ்ச்சிகள் மற்றும் மந்திர வித்தைகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளில் குழந்தைகள் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.