SELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

1 ஜனவரி 2023, 5:43 AM
சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிள்ளான், ஜன 1- இங்குள்ள பண்டார் புத்ரி, மற்றும் பண்டார் புத்ரா வட்டார குடியிருப்பாளர்கள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்வு அண்மையில் இங்கு நடைபெற்றது.  

கோத்தா ராஜா மற்றும் சுங்கை காண்டீஸ் கெஅடிலான் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் அகமது ஜவாவி முகமது முக்னி தலைமையேற்றார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மலேசியாவின் வளர்ச்சிக்கு மக்களின் ஒற்றுமை அடித்தளமாக விளங்குவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர்  கூறினார்.

இதுநாள் வரை நாட்டு மக்கள் கடைபிடித்து வரும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் அடுத்த தலைமுறையினருக்கும் தொடரப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அடுத்தாண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு புத்தகப் பைகளை அவர் ஒப்படைத்தார். விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் அதிர்ஷ்டக் குலுக்கலும் இடம் பெற்றது.

கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி செயலவை உறுப்பினர் ரேய்மண்ட் இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.