ECONOMY

மார்ச் 13 அன்று சுபாங் ஜெயாவில் வேலை வாய்ப்பு சந்தை,

7 மார்ச் 2022, 9:44 AM
மார்ச் 13 அன்று சுபாங் ஜெயாவில் வேலை வாய்ப்பு சந்தை,

மார்ச் 13 அன்று சுபாங் ஜெயாவில் வேலை வாய்ப்பு சந்தை,

ஷா ஆலம், மார்ச் 7: சுபாங் ஜெயா குடியிருப்பாளர்கள், குறிப்பாக வேலை தேடுபவர்கள், மார்ச் 13 அன்று சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நாள் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்துக ்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, JKP பகுதி 4 சமூக மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறினார்.

"இந்தத் திட்டத்தின் வழி பொதுமக்களுக்கு திறந்த நேர்காணலில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், மனித வள நிபுணரிடமிருந்து சரியான விண்ணப்பத்தை எழுதவும் கற்றுத்தரப்படும் " என்று மிஷெல் இங் மேய் ஸீ கூறினார்.

பேஸ்புக்கில் உள்ள கிராப்பிக் தகவலின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் பதிவு செய்யலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 011-5550 2881 அல்லது info@selangorkerjaya.com.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அழைக்கலாம்.

சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை என்பது சிலாங்கூரின் மந்திரி புசார் கழகம் அல்லது எம்பிஐயின் ஒரு முன் முயற்சியாகும், இது மக்களின் பொருளாதாரத்திற்கு பொருத்தமான மற்றும் பயனுள்ள ரீதியில் உத்வேகம் அளிக்கவல்லது..

26 ஜனவரி 2021 அன்று டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடங்கப்பட்டது, சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தை சிலாங்கூர் தொழில் என்பது மாநில மக்களுக்கான திறமை மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமாகும், இது சிலாங்கூரில் வேலை தேடும் 10,000 நபர்களுக்குப் பயனளிக்கும்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.