ECONOMY

சி.எஸ்.ஆர். திட்டங்களுக்காக மந்திரி புசார் கழகத்திற்கு 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

24 ஜனவரி 2022, 7:37 AM
சி.எஸ்.ஆர். திட்டங்களுக்காக மந்திரி புசார் கழகத்திற்கு 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

கோம்பாக், ஜன 24- சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக மந்திரி புசார் கழகத்திற்கு (எம்.பி.ஐ.)  இவ்வாண்டு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய சமய விவகாரம், பள்ளிகள், அரசு சாரா அமைப்புகள், விளையாட்டு, சுற்றுச்சூழல், விழாக்கள் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு அமையும் என்று அக்கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இவ்வாண்டிற்கான ஒதுக்கீடு இன்றும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், சமூகப் பணிகளுக்காக கடந்தாண்டு வழங்கப்பட்டதைப் போல் இவ்வாண்டும் 3 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என நம்புகிறோம் என அவர் சொன்னார்.

செலாயாங், மலபார் ஹிடாயுத்துல் சூராவ் நிர்வாகத்தினரிடம் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நிதியை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.