ஷா ஆலம், ஜன 20- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40,917 குடும்பங்கள் சிலாங்கூர்அரசின் வெள்ள உதவி நிதியைப் பெற்றன.
இக்குடும்பங்களுக்கு பந்துவான் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் தலா 1,000 வெள்ளி
வழங்கப்பட்டது.
இந்த உதவித் திட்டத்திற்கு இதுவரை 4 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் வெள்ளி
செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது தவிர, வெள்ளத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 11,236 குடும்பங்கள் நிதியுதவி பெற்ற வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கிள்ளான், (10,237 குடும்பங்கள்)
உலு லங்காட் (6,867 குடும்பங்கள்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
மேலும், கோல லங்காட்டில் 5,279 குடும்பங்களும் சிப்பாங்கில் 3,966 குடும்பங்களும் கோல சிலாங்கூரில் 2,366 குடும்பங்களும் கோம்பாக்கில் 898 குடும்பங்களும் உலு சிலாங்கூரில் 93 குடும்பங்களும் சபாக் பெர்ணமில் 35 உதவித் தொகை பெற்றன.
ECONOMY
40,000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது
20 ஜனவரி 2022, 12:20 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
ஊராட்சி மன்ற வணிக வளாகங்களின் வாடகை குறைப்பு: சிலாங்கூர் மாநில அரசு பரிசீலனை
Shalini Rajamogun
6 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




