ஷா ஆலம், நவ 14- இளையோருக்கான சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டம் இன்று தாமான் டெம்ப்ளர் தொகுதியில் உள்ள கம்போங் செலாயாங் இண்டா சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இலவச தடுப்பூசித் திட்டத்தில்
12 வயதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட அனைவரும் பங்கேற்கலாம். இதுவரை முதல் தடுப்பூசிக்கான முன்பதிவு தேதி கிடைக்காதவர்கள் அல்லது இரண்டாவது தடுப்பூசிக்கான தேதியை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எந்த குடிமகனும் தடுப்பூசியை பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
பதின்ம வயதினருக்கு செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்த 150,000 டோஸ் நோய்த்தடுப்பு மருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ள வேளையில் இத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.
HEALTH
தாமான் டெம்ப்ளர் தொகுதியில் இன்று தடுப்பூசித் திட்டம்
14 நவம்பர் 2021, 3:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் காசநோய் பாதிப்பு சீராக உள்ளது; மாநில அரசு RM800 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
28 ஏப்ரல் 2026

selangor
ஶ்ரீ செத்தியா தொகுதியில் இலவச சுகாதார முகாம் 2026 வெற்றிகரமாக நடைபெற்றது
Shalini Rajamogun
26 ஏப்ரல் 2026

selangor
முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
23 ஏப்ரல் 2026

national
நீண்டகால வெப்ப வானிலை உடல்நலத்தை பாதிக்கக்கூடும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




