ECONOMY

நாட்டில் இன்று கோவிட்-19 எண்ணிக்கை 4,782 ஆக பதிவு

25 அக்டோபர் 2021, 9:45 AM
நாட்டில் இன்று கோவிட்-19 எண்ணிக்கை 4,782 ஆக பதிவு

ஷா ஆலம், அக் 25- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 4,782 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,666 ஆக இருந்தது.

இதன் வழி நாட்டில் இதுவரை அந்த பெருந்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த நோய்த் தொற்றினால் கடந்த 14 நாட்களில் 716 பேர் மரணமடைந்துள்ளதாக கூறிய அவர், கடந்த 14 நாட்களில் 10 லட்சம் பேருக்கு 22 பேர் என்ற விகிதாசார அடிப்படையில் மரணங்கள் நேர்ந்துள்ளதை இது காட்டுகிறது என்றார்.

கடந்த ஒரு வார காலத்தில் நோய்ப் பரவலின் சராசரி எண்ணிக்கை 5,861 ஆக இருந்தது. அதே சமயம் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 72.8 விழுக்காடாக பதிவானது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.