ECONOMY

நாட்டில் நேற்று வரை 2.1 கோடி பேர்   தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

11 அக்டோபர் 2021, 11:42 AM
நாட்டில் நேற்று வரை 2.1 கோடி பேர்   தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 11- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 90 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 482 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 520 பேர் அல்லது 94.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 129,518 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 31,932  பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 97,586  பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 7,4 விழுக்காட்டினர் அல்லது 231,858 பேர் இரண்டு  டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 72,2 விழுக்காட்டினர் அல்லது 22 லட்சத்து 71 ஆயிரத்து 858 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான மரணச் சம்பங்கள் பதிவு செய்யப்படவில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.