ECONOMY

இன்று நாட்டில் 9,890  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 1,402 பேர் பாதிப்பு

7 அக்டோபர் 2021, 9:46 AM
இன்று நாட்டில் 9,890  கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 1,402 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், அக் 7- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 9,380 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 9,380 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 1,116 ஆகப் பதிவான கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 1,402 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாக கூறினார்.

நாட்டில் மிக அதிகமாக கோவிட்-19 நோய்த் தொற்றை பதிவு செய்த மாநிலமாக சரவா விளங்குகிறது. இம்மாநிலத்தில் இன்று 1,413 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் கிளந்தானில் 1,032 பேரும் ஜொகூரில் 993 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- சபா (820), பேராக் (794), பினாங்கு (721), திரங்கானு (699), பகாங் (564), கெடா (503), மலாக்கா (260), கோலாலம்பூர் (250), பெர்லிஸ் (200), நெகிரி செம்பிலான் (180), புத்ரா ஜெயா (59), லபுவான் (0).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.