ECONOMY

தூய்மை & பசுமை திட்டத்தின் கீழ் 500 மரங்கள் நடும் இயக்கம்: செந்தோசா தொகுதி தொடக்கியது

6 செப்டெம்பர் 2021, 8:27 AM
தூய்மை & பசுமை திட்டத்தின் கீழ் 500 மரங்கள் நடும் இயக்கம்: செந்தோசா தொகுதி தொடக்கியது

கிள்ளான்,செப், 6-  தூய்மை, பசுமை திட்டத்தின் கீழ் 500 மரங்களை நடும் இயக்கத்தை செந்தோசா சட்டமன்ற தொகுதி நேற்று தொடக்கியது.

செந்தோசா தொகுதியை தூய்மையும் பசுமையும் நிறைந்த இடமாக உருவாக்கும் நோக்கிலான இத்திட்டம் செப்டம்பர் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இத்திட்டத்தின் தொடக்கமாக நேற்று ஜாலான் ராஜா நோங் சாலையில் 100 மரக்கன்றுகளை நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கி உதவிய அறிவா ஜெனரல் செர்விசஸ் நிறுவனத்தின் டத்தோ அறிவா, ஏசஸ் மெயில், சோக்கா காக்காய் மலேசியா ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, பல்வேறு அரசு சாரா அமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள், தொண்டூழிய அமைப்புகளும் இத்திட்டத்தின் வெற்றிக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.