ECONOMY

பண்டமாரானில் நாளை குறியீடு KLANG26SEP  என்னும் நடமாடும் தடுப்பூசித் திட்டம்

25 செப்டெம்பர் 2021, 9:51 AM
பண்டமாரானில் நாளை  குறியீடு KLANG26SEP  என்னும் நடமாடும் தடுப்பூசித் திட்டம்

ஷா ஆலம், செப் 25- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் நாளை பண்டமாரான் விளையாட்டு மையத்தில் நடைபெறும்.

மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த இயக்கம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி  வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதோடு சரியான பற்றுச் சீட்டு குறியீட்டு எண்ணையும் உள்ளிட வேண்டும். 

பண்டமாரான் தொகுதிக்கான நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் குறியீடு KLANG26SEP  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று பண்டார் உத்தாமா மற்றும் டாமன்சாரா டாமாய் தொகுதிகளில் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

சிலாங்கூரிலுள்ள 11 தொகுதிகளை இலக்காக கொண்ட இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.