கோல லங்காட், செப் 22- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வழி சிஜங்காங் வட்டாரத்தை சேர்ந்த 300 பேர் பயன் பெற்றனர்.இந்த தொகுதியில் உள்ள வெளிநாட்டினரே அதிகளவில் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றதாக சிஜங்காங் கிராமத் தலைவர் முகமது சுஹாய்மி மாட் காமில் கூறினார்.
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே கட்டங் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இம்மாதம் 13 ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
HEALTH
நடமாடும் தடுப்பூசி இயக்கம்: சிஜங்காங்கில் 300 பேர் பயன் பெற்றனர்
22 செப்டெம்பர் 2021, 5:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் காசநோய் பாதிப்பு சீராக உள்ளது; மாநில அரசு RM800 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
28 ஏப்ரல் 2026

selangor
ஶ்ரீ செத்தியா தொகுதியில் இலவச சுகாதார முகாம் 2026 வெற்றிகரமாக நடைபெற்றது
Shalini Rajamogun
26 ஏப்ரல் 2026

selangor
முதியோர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை திட்டம்: சிலாங்கூர் மாநில அரசு
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
23 ஏப்ரல் 2026

national
நீண்டகால வெப்ப வானிலை உடல்நலத்தை பாதிக்கக்கூடும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




