ECONOMY

எஸ்.பி.எம். மாணவர்களுக்கு இயங்கலை வழி இலவச டியூஷன் வகுப்பு- கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாடு

27 ஆகஸ்ட் 2021, 7:12 AM
எஸ்.பி.எம். மாணவர்களுக்கு இயங்கலை வழி இலவச டியூஷன் வகுப்பு- கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், ஆக 27- கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாக நடைபெறும் கூடுதல் கணித பாடத்திற்கான இலவச டியூஷன் வகுப்பில் பங்கு கொள்ளுமாறு எஸ்.பி.எம். மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த வகுப்பில் யுனிசெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் பயிற்சியை வழங்கவுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்த வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்கும் மற்றும் அங்கு நடத்தப்படும் பாடங்கள் தொடர்பான புதிர்ப் போட்டிகளில் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யும் மூன்று மாணவர்களுக்கு சம்சுங் கோலெக்சி டேப் ஏ7 கையடக்க கணினி அன்பளிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டிலான இந்த இலவச டியூஷன் வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் http://t.ly/xY4r எனும் அகப்பக்கதை நாடலாம் என்றும் அவர் சொன்னார்.

திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் இந்த வகுப்புகளில் கூடுதல் கணிதப்பாடத்தின் 10 தலைப்புகள் மீது பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.