ECONOMY

இன்று 17,672 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு -சிலாங்கூரில் 4,316 நேர்வுகள்

23 ஆகஸ்ட் 2021, 10:46 AM
இன்று 17,672 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு -சிலாங்கூரில் 4,316 நேர்வுகள்

ஷா ஆலம், ஆக 23- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 17,672 ஆகப் பதிவானது. இந்த எண்ணிக்கை  நேற்று 19,807 ஆகவும் கடந்த சனிக்கிழமை 22,262 ஆகவும் இருந்தது.

சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,316 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சபா மாநிலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்டு 2,1474 ஆக ஆன வேளையில் கெடாவில் 1,602 பேரும் சரவாவில் 1,538 பேரும் பினாங்கில் 1,451 பேரும் ஜொகூரில் 1,367 பேரும் கிளந்தானில் 1,176 பேரும் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பேராக்கில் 952 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கோலாலம்பூர் (891), பகாங் (506), நெகிரி செம்பிலான் (478), பெர்லிஸ் (57), புத்ரா ஜெயா (24), லபுவான் (7) அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.