ECONOMY

சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்)பாரிசான் நேஷனல் (பிஎன்), பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் எம்.பி.கள் இஸ்தானா நெகாராவுக்கு சென்றனர்.

19 ஆகஸ்ட் 2021, 6:11 AM
சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்)பாரிசான் நேஷனல் (பிஎன்), பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின்  எம்.பி.கள்  இஸ்தானா நெகாராவுக்கு  சென்றனர்.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19: டான் ஸ்ரீ மொகிதீன் யாசின்  பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்தானா நெகாரா இன்றும் கவனம் செலுத்தலுக்குறிய இடமானது.

அம்னோ எம்.பி.க்களை ஏற்றிச் சென்ற பேருந்து காலை 10.38 மணிக்கு இஸ்தானா நெகாராவின் இரண்டாவது வாயிலில் நுழைந்தது, அதைத் தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளே சென்றன. மேலும், சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்) எம்.பி.யை ஏற்றிச் சென்ற பேருந்து காலை 10.44 மணிக்கு வந்தது.

பாரிசான் நேஷனல் (பிஎன்), பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் எம்.பி.க்களும் இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இஸ்தானா நெகாராவுக்கு கொண்டுவர திட்டமிடப் பட்டதில்  அடங்கும்.

நேற்று மாலை 4 மணியளவில், இஸ்தானா நெகாராவுக்கு ஒரு பிரதமர் வேட்பாளரை பரிந்துரைக்க எம்.பி.க்கள் சத்தியப் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் காலக்கெடு முடிவடைந்தது.

கடந்த திங்கட்கிழமை பகோ எம்.பி.யாக இருந்த டான் ஸ்ரீ மொகிதீன் யாசின்  ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மை நம்பிக்கை உள்ளவர்களில் ஒருவரை பிரதமராக நியமிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின தேர்வை மாமன்னருக்கு தெரிவிக்க மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அஸீஸான் ஹாரூன் 220 உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.