ECONOMY

கட்சித் தலைவர்கள் மாமன்னரை சந்தித்தனர்.

17 ஆகஸ்ட் 2021, 1:20 PM
கட்சித் தலைவர்கள் மாமன்னரை சந்தித்தனர்.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17- யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பை இன்று மாலை 4 மணியளவில் முடித்தார்.

அதில் PAS துணைத் தலைவர் டத்தே ஶ்ரீ துவான் இப்ராஹிம், பெஜூவாங் தலைவர் டத்தோ ஶ்ரீ முக்ரீஸ் மகாதீர், அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமாட் சஹிட்  ஹமிடி மற்றும் ஜ.செ.க தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய அவரது சந்திப்பில் கட்சித் தலைவர்கள் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் (PKR), முகமட் சாபு (அமானா) மற்றும் டத்தோஸ்ரீ மொஹமட் ஷாஃபி அப்தால் (வாரீசன்) மற்றும் கபுங்கன் பார்டி சரவாக் (GPS) ஆகிய கட்சிகள் கிட்டத்தட்ட அனைத்தும் கலந்து கொண்டன.

துணை யாங் டி-பெர்டுவான் அகோங்கான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவும் இஸ்தானா நெகாராவில் இருந்தார் என்பது புரிகிறது. யாங் டி-பெர்த்துவான் அகோங்குடனான சந்திப்பில் சுல்தான் நஸ்ரினும் கலந்துக் கொண்டார். மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான புதிய அரசியல் ஒருமித்த கருத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

தங்கள் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ அன்வர், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ளவும், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய அகோங் அறிவுறுத்தினார் என்றார் போர்ட்டிக்சன் எம்.பி யான அவர்.

எனவே, நாம் வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு புதிய பிரதமர் மற்றும் ஒரு புதிய துணைப் பிரதமரை நியமிப்பது பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. "அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன ஆனால் சோர்வாகவும் சலிப்பாகவும் இருக்கும் பழைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருமித்த கருத்து உள்ளது ..." என்று லிம் மற்றும் முகமட் சாபு உடன் வந்த அவர் கூறினார்.

50 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இஸ்தானா நெகாராவின் கேட் 2 க்கு வெளியே முகாமிட்டிருந்தனர்.  இந்நாட்டின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து  டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

நேற்று, அல்-சுல்தான் அப்துல்லா  மொகிதீன் யாசினின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார் மற்றும் அவருடன் முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. ஒரு புதிய பிரதமரை நியமிப்பதற்காக ஒரு தற்காலிக பிரதமராக பணியாற்ற டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் நியமிக்க மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.