ஷா ஆலம், டிச 18: இந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள சிலாங்கூரில் உள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சபாக் பெர்னம், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
டிசம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி சிலாங்கூரில் 22,931 கோவிட் -19 நோயால் பாதிக்கபபட்டதாக பதிவாகியுள்ளதாகவும், மாநிலத்தின் தொழில்துறை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக அவர் விளக்கினார்.
"குடிமக்கள் மத்தியில் கோவிட் -19 நோய் கண்டிருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது" என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் கோவிட் -19 நோய் கண்டிருப்பவர்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அக்டோபர் 14 முதல் சிலாங்கூரில் பி.கே.பி.பி. அமல்படுத்தப் படுகிறது








