ஷா ஆலம், செப் 21- நீரை சேமிப்போம் பிரசார இயக்கத்தின் வாயிலாக நீர் விநியோகம் தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பு பத்து தீகா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் இந்த ஏற்பாட்டை
முதன் முறையாக செய்துள்ளதாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா
இஸ்மாயில் கூறினார்.
இத்திட்டம் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை அடுத்து மேலும் இரு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை சமூகப் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதற்கு இத்திட்டம் வாய்ப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் வழி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதோடு மக்கள்
நல்வாழ்வுக்கு பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஆயர் சிலாங்கூர்
அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
SELANGOR
நீர் விநியோகம் : ஆதங்கத்தை வெளிப்படுத்த பத்து தீகா மக்களுக்கு வாய்ப்பு
21 செப்டெம்பர் 2020, 4:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘BRAIS 2026’ புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
17 மே 2026

selangor
ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
17 மே 2026

national
அமெரிக்க நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள சிலாங்கூர்: 22 உலகளாவிய நிறுவனங்களுடன் மந்திரி புசார் சந்திப்பு
Shalini Rajamogun
15 மே 2026

selangor
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாகச் சிலாங்கூர் விளங்குகிறது
Shalini Rajamogun, Adam Azman
15 மே 2026

உங்கள் கருத்து என்ன?




